/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு மலை பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: இரண்டு பெண்கள் கைது
/
ஏற்காடு மலை பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: இரண்டு பெண்கள் கைது
ஏற்காடு மலை பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: இரண்டு பெண்கள் கைது
ஏற்காடு மலை பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: இரண்டு பெண்கள் கைது
ADDED : மார் 05, 2025 07:20 PM

ஏற்காடு மலை பாதை 60 அடி பாலத்திற்கு அருகில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்றை ஏற்காடு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அழுகிய நிலையில் கிடைத்த பெண் சடலத்தை ஏற்காடு போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அந்த பெண்ணின் ஹேன்ட் பேக் மற்றும் பர்ஸ் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அதை சோதனை செய்து பார்த்தபோது அதில் அவர் வேலை செய்யும் அடையாள அட்டை அவர் சேலத்தில் தங்கியிர்ந்த தங்கும் விடுதியின் விலாசம் மற்றும் பணம் 200 ரூபாய் இருந்தது.
இதை வைத்து அந்த திருச்சி துறையுரை சேர்ந்த லோகநாயகி என்பதும் அவர் சேலத்தில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஃபியூச்சர் விஷன் ஸ்டடி சென்டரில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது. தற்போது கிடைத்துள்ள அடையாள அட்டைகளை வைத்து லோகநாயகி எவ்வாறு இங்கு வந்தார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து மலைப்பாதையில் வீசி உள்ளனரா என்ற கோணத்தில் ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இரண்டு பெண்களும் கைது...@@
விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்...
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த லோகநாயகி என்ற இளம் பெண், சேலத்தில் உள்ள கோச்சிங் கிளாஸ் ஒன்றில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார் .
இந்த நிலையில் அவர் ஏற்காடு மலைப் பாதையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளம் பெண்ணின் காதலன் அப்துல் ஹபீஸ் (வயது 22) கைது செய்யப்பட்டார் .
இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் 4 -ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரிடம் விசாரித்ததன் பேரில் காதலன் அப்துல் ஹபீ சின் மற்றொரு காதலி சென்னை ஆவடியைச் சேர்ந்த தாவியா சுல்தானா (வயது 22 ) மற்றும் துறையூரை சேர்ந்த மோனிஷா (வயது 23) கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தாவியா சுல்தானா சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள மோனிஷா விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து வருகிறார்.
மூவரும் சேர்ந்து லோகநாயகிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.