ADDED : ஆக 29, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட் மோதி
தொழிலாளி பலி
சேலம், ஆக. 29-
சேலம், பள்ளப்பட்டி, ராகவனேஸ்வரர் நகரை சேர்ந்தவர் முரளி, 30. மூட்டை துாக்கும் தொழிலாளியான இவர், கடந்த, 26ல் கொண்டலாம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, 'டியோ' மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த மற்றொரு மொபட், முரளி மொபட் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த முரளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

