sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் திட்ட பயிற்சி

/

பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் திட்ட பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் திட்ட பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் திட்ட பயிற்சி


ADDED : மே 21, 2024 11:48 AM

Google News

ADDED : மே 21, 2024 11:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: பெரியார் பல்கலையில், பள்ளி மாணவர்களுக்கு, இளம் விஞ்ஞானிகள் திட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.

சேலம் பெரியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் இணைந்து, 'இளம் விஞ்ஞானிகள் திட்டம்' பற்றிய பயிற்சி வகுப்பு பல்கலையில் நேற்று துவங்கியது. இரண்டு வாரம் நடைபெறும் பயிற்சியின் துவக்க விழா, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்தது.

பல்கலை (பொறுப்பு) பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி பேசுகையில்,'' மாணவர்கள் பள்ளியில் பயிலும் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும், ஒவ்வொருவரும், தம்முடைய வாழ்க்கையில் அறிவியல் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார். மொத்தம், 80 பள்ளி மாணவ, மாணவியர் பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ்மாறன் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us