தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆக்கிரமிப்பு அகற்ற 1 வாரம் அவகாசம்

ஆக்கிரமிப்பு அகற்ற 1 வாரம் அவகாசம்

ஆக்கிரமிப்பு அகற்ற 1 வாரம் அவகாசம்


ADDED : செப் 25, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், மேட்டூர் நகராட்சி, சேலம் கேம்ப் பகுதியில் உள்ள நகராட்சி நிலத்தில் சிலர் வீடுகள், கடைகளை கட்டினர். இதுகுறித்து எழுந்த புகாரால், நேற்று காலை, 8:30 மணிக்கு, நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் மதுசூதனன், சேகர் உள்ளிட்ட அலுவலர்கள், ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைனுடன் சென்றனர்.

வருவாய்த்துறை சார்பில் மேட்டூர் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்டோரும், பாதுகாப்புக்கு மேட்டூர், கருமலைக்கூடல், கொளத்துார் போலீசார், தீயணைப்பு, மீட்பு குழுவினரும் வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றதும், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 5வது வார்டு கவுன்சிலர் லாவண்யா, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'பெட்ரோல் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிப்போம்' என, கூச்சலிட்டனர். மேலும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் கேட்டனர். சிறிது நேர வாக்குவாதத்துக்கு பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வார அவகாசம் கொடுத்துவிட்டு, அலுவலர்கள் சென்றனர்.

பேனர் வைப்பு

ஆத்துார், மஞ்சினியில், 3.15 ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 5 பேர் ஆக்கிரமித்து விவசாய நிலமாக பயன்படுத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2021ல், ஆத்துார் மாவட்ட சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆக., 10ல், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். நேற்று, ஆத்துார் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில் வருவாய்த்

துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். மரவள்ளி உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்துள்ளதால், அறுவடை செய்ய அவகாசம் கேட்டனர். அதனால், 4 வாரம் அவகாசம் வழங்கி, அந்த இடத்தில், 'அரசுக்கு சொந்தமான நிலம்' என, பேனர் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us