ADDED : ஏப் 14, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
ஆத்துார், ஆத்துார் நகராட்சி சார்பில், 100 சதவீதம் ஓட்டு போட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் வரும், 23ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆத்துார் நகராட்சி சார்பில், பேட்டரி வாகனங்களில் ஒலி பெருக்கி வைத்து, 100 சதவீத ஓட்டு குறித்து, பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒவ்வொரு தெருவாக சென்று, 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் என எடுத்துரைத்து, தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட துண்டு பிரசுரங்களை, வாக்காளர்களிடம் வழங்கினர்.
