/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 06, 2025 04:50 AM
சேலம்:புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும், 1,900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், இன்று புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக சேலம், ஆத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.புரட்டாசி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்கேற்ப சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும், சிறப்பு பஸ்களுக்கு இன்று மாலை 5:00 மணி முதல் நாளை மாலை 5:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.