தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குப்பை கொட்டுவதை எதிர்த்து 100வது முறை ஆர்ப்பாட்டம்

குப்பை கொட்டுவதை எதிர்த்து 100வது முறை ஆர்ப்பாட்டம்

குப்பை கொட்டுவதை எதிர்த்து 100வது முறை ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 24, 2025 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:குறுக்குப்பாறையூரில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, 100வது முறையாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி டவுன் பஞ்., குப்பையை, 10 ஆண்டுகளாக குஞ்சாம்பாளையத்தில் கொட்டினர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பால், மாற்றாக குள்ளம்பட்டியில் இடம் தேர்வு செய்தனர். அங்கும் எதிர்ப்பால், அரசிராமணி குறுக்குப்பாறையூரில் கடந்த ஆண்டு இடத்தை தேர்வு செய்து, ஆறு மாதங்களாக திடக்கழிவு மேலாண் பணி நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, 100வது முறையாக நேற்று, திடக்கழிவு மேலாண் திட்டப்பணி நடக்கும் இடத்தின் முன், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், நுாதன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மாடுகளுடன், கறுப்பு கொடி ஏந்தி, முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us