தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்


ADDED : டிச 10, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

௧௦௮ சங்காபிஷேகம்

தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. அதில் சகஸ்ரலிங்க மண்டபத்தில் மாலை, 4:00 மணிக்கு மேல், தீர்த்த கலசங்கள் மற்றும் நெல் மீது, 108 சங்குகளால் சிவலிங்கம் போல் அமைத்து புனிதநீர் ஊற்றினர். தொடர்ந்து நடந்த யாக பூஜையில் பழங்கள், நவ தானியங்கள் உட்பட பூஜை பொருட்களால் யாக வேள்வி செய்தனர். தீர்த்த கலசம் மற்றும் சிவலிங்க உருவத்தில் இருந்த சங்குக்கு, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் சங்கு, தீர்த்த கலசத்தில் நிரப்பிய இருந்த புனிதநீரால், சகஸ்ரலிங்கம், கைலாசநாதருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us