/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10.80 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு தரமான கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
/
10.80 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு தரமான கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
10.80 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு தரமான கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
10.80 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு தரமான கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2025 07:26 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 1,735 ரேஷன் கடைகள் கட்டுப்பாட்டில், 11,05,783 கார்டுகள் உள்ளன. அவற்றில் அனைத்து அரிசி கார்டு-தாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்-படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் அரிசி கார்டுதாரர்கள், 10,79,132 பேர், இலங்கை மறுவாழ்வு குடும்பத்தினர், 987 பேர் என, 10,80,119 கார்டுதாரர்-களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளது. தகுதியுள்ள கார்டுக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவற்றை, நுகர்வோர் பெறலாம். ஜன., 9 முதல், பொங்கல் பரிசு வினியோகம் நடக்கும்.
இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ''பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும். அதற்கு முதல் கட்டமாக, 4,18,706 வேட்டி, 3,17,596 சேலைகள் மாவட்-டத்துக்கு வரப்பெற்றுள்ளோம். ஜன., 9க்குள் தேவையான வேட்டி, சேலை வரத்து முழுமையாக கிடைத்துவிடும்,'' என்றார்.
ரேஷன் விற்பனையாளர்கள் கூறியதாவது: கடந்தாண்டு முதல் சுற்றில் வினியோகித்த கரும்பு மட்டும் தரமாக இருந்தது. பின் வழங்கியவை, தரமற்று காணப்பட்டதால், நுகர்வோர் வாங்காமல் தகராறு செய்தனர். அத்துடன், 20 எண்ணிக்கை கொண்ட முழு கரும்பு, ஒரு கட்டாக கடைக்கு வினியோகமானது. அதில், 17 - 19 எண்ணிக்கையில் தான் கரும்பு இருந்தது. அதன் இழப்பு, எங்கள் தலையில்தான் விழுந்தது. கரும்பு எண்ணிக்கை குறை-யாமல், தரமான கரும்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.1,000 உண்டா?கூட்டுறவு துணை பதிவாளர்கள் கூறியதாவது: நுகர்வோருக்கு தர-மான கரும்புகள் வழங்க, அந்தந்த துணை பதிவாளர் தலை-மையில் குழு அமைத்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு தனித்தனியே அனுப்பப்படும். பொங்கல் பரிசு தொகையாக, 1,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, ஜன., 7ல் வெளியாக வாய்ப்புள்ளது. அரசு, கடன் வாங்கி தான், பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது. முன்னதாக கடன் வாங்கினால் வட்டி செலவு அதிகமாகும். இரு நாட்களுக்கு முன் வாங்கினால் வட்டி சுமை சற்று குறையும். குறிப்பாக பரிசுத்தொகையை முன்-னதாகவே அறிவித்தால், எதிர்க்கட்சியினர் கூடுதலாக கேட்டு அர-சியல் ஆக்கிவிடுவர். அதை சமாளிக்கவே, தற்போதைக்கு பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.