ADDED : மே 15, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடியில் இயக்கப்படும், 14 தனியார் பள்ளிகளின் பஸ், வேன் உள்பட, 123 வாகனங்கள், முத்தம்பட்டியில் நேற்று காலை, 10:00 மணிக்கு, ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தன.
சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அடங்கிய குழுவினர், அங்கு கொண்டு வரப்பட்ட, 90 வாகனங்களை ஆய்வு செய்தனர். அதில் அவசர வழி கதவு, இருக்கை சேதம் உள்பட, பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 11 வாகனங்களை சரிசெய்து, ஒரு வாரத்தில் மறு ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. பின் வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் குழுவினர், தீ தடுப்பு, தீயணைப்பு முறைகள் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.