/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் 11 தொகுதியை கைப்பற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன்
/
சேலத்தில் 11 தொகுதியை கைப்பற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன்
சேலத்தில் 11 தொகுதியை கைப்பற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன்
சேலத்தில் 11 தொகுதியை கைப்பற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன்
ADDED : நவ 05, 2024 06:34 AM
ஓமலுார்: சேலம் மத்திய மாவட்டத்துக்குட்பட்ட, ஓமலுார் சட்டசபை தொகுதி, தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசிய-தாவது:
தமிழகத்தில், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். சேலம் மாவட்டத்தில், 11 தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். 2019 லோக்சபா தேர்தலில், 33 ஆயிரம் ஓட்டு அதிகம் பெற்றது ஓமலுார் தொகுதி. முதல்வர் சிறப்பான ஆட்சியை நடத்தி வரு-கிறார். பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளராக வந்துள்ள முன்னாள் எம்.பி.,சுகவனத்-துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். 2026 தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஓமலுார் தொகுதி வெற்றி பெறும். வரும், 8ல் காடையாம்பட்டி, ஓமலுார், தாரமங்கலம் ஆகிய பகுதியில் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறவுள்ளது.இவ்வாறு பேசினார்.மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய செயலர்கள் செல்வகுமரன், பாலசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.