/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓராண்டுக்கு வழங்க வேண்டியதை விட கூடுதலாக 112 டி.எம்.சி., நீர் வரத்து

ADDED : நவ 07, 2025 01:08 AM
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த மே, 31ல் அணை நீர்மட்டம், 112 அடி, நீர்இருப்பு, 81.83 டி.எம்.சி.,யாக இருந்தது. 2018 பிப்., 16ல், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் ஜூன், 1 முதல் அடுத்த ஆண்டு மே, 31 வரை, கர்நாடகா, 177.25 டி.எம்.சி., நீர் மேட்டூர் அணைக்கு விடுவிக்க வேண்டும். நடப்பாண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை, முன்னதாக ஜூனில் தொடங்கியது. அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஜூன், 29ல் அணை நிரம்பியது. தொடர்ந்து நடப்பாண்டில், 7 முறை அணை நிரம்பியுள்ளது.
கடந்த ஜூன், 1 முதல் நேற்று வரை, மேட்டூர் அணைக்கு, 290 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. இதில், 173 டி.எம்.சி., நீர், டெல்டா பாசனத்துக்கும், 98 டி.எம்.சி., நீர் உபரியாகவும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு, 6.5 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஓராண்டுக்கு வழங்க வேண்டிய, 177.25 டி.எம்.சி., நீரை விட, 5 மாதங்களிலேயே, 112.75 டி.எம்.சி., நீர், கூடுதலாக, மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.