ADDED : அக் 04, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்:புரட்டாசி,
3வது சனியை ஒட்டி, தலைவாசல், மணிவிழுந்தான் தெற்கில் உள்ள, வரதராஜ
பெருமாள் கோவில் முன் உள்ள கொடி மரத்தில் திருக்கோடி ஏற்றப்பட்டு
வழிபாடு செய்வது வழக்கம்.
நடப்பாண்டு வரதராஜ பெருமாள், மகா விஷ்ணு
மற்றும் பத்து அவதார உருவங்கள் கொண்ட சிலை என, 12 ஐம்பொன் சிலைகள்
வடிவமைக்கப்பட்டன.
இச்சிலைகளை நேற்று முன்தினம் பிரதிஷ்டை
செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு, 7:00 மணிக்கு, தனித்தனியே, 12
அலங்கார ரதங்களில், 12 சிலைகளும் திருவீதி உலாவாக, முக்கிய வீதிகள்
வழியே கொண்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
