ADDED : அக் 03, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்:புரட்டாசி,
3ம் சனிக்கிழமையில், தலைவாசல், மணிவிழுந்தான் தெற்கில் உள்ள
வரதராஜ பெருமாள் கோவில் முன் உள்ள கொடி மரத்தில் திருக்கோடி
ஏற்றப்பட்டு வழிபடுவது வழக்கம்.
அதை ஒட்டி, இந்த ஆண்டில் வரதராஜ
பெருமாள், மகா விஷ்ணு மற்றும் பத்து அவதார உருவங்கள் கொண்ட சிலை என, 12
ஐம்பொன் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. அச்சிலைகளை நேற்று, கோவில்
முன் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள்
வழிபட்டனர். இன்று இரவு, 7:00 மணிக்கு மேல், தனித்தனியே, 12 அலங்கார
ரதங்களில், 12 சிலைகளும் திருவீதி உலாவாக கொண்டு
செல்லப்படுகிறது.
