UPDATED : நவ 17, 2026 07:10 AM
ADDED : நவ 17, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே முழு நேர நுாலகம் உள்ளது. 10,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். தினமும், 50க்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தற்போது கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தில், போலி நுால்கள் இடம்பெற்றதாக புகார் எழுந்தது. இதனால் ஓமலுார் நுாலகத்தில் ஆய்வு செய்ததில், 2025 மே மாதம், பீனிக்ஸ் பதிப்பகம் சார்பில் ஆர்டர் செய்யப்பட்ட, 13 புத்தகங்கள், 2026 மார்ச்சில் நுாலகத்துக்கு வந்தது தெரிந்தது. இதனால், 13 புத்தகங்களை தனியே எடுத்து கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட நுாலகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
