/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீரபாண்டி ஆறுமுகத்தின் 13ம் ஆண்டு நினைவு நாள்
/
வீரபாண்டி ஆறுமுகத்தின் 13ம் ஆண்டு நினைவு நாள்
ADDED : நவ 24, 2025 04:26 AM
சேலம்:சேலத்தில் மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 13ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று பூலாவரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் ஆகியோரது படங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து முக்கிய நிர்வாகிகள், குடும்பத்தினர், தொண்டர்களுடன் அவரது நினைவிடம் வரை மவுன ஊர்வலம் சென்று, அங்கு அவரது சமாதியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சிவலிங்கம், மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பாண்டிதுரை, பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி ராஜா உள்ளிட்ட முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினர், கட்சி முக்கிய நிர்வாகிகள் நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

