ADDED : ஆக 12, 2026 05:13 AM
ஓமலுார்:ஓமலுார், பூசாரிப்பட்டி ஆர்.பி.சாரதி தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி
தலைவர் நிதிஷ் ஹரிஹர், விழாவை தொடங்கி வைத்து, ஒழுக்கம்,
நல்நோக்கத்துடன் வாழ்க்கையை வழிநடத்துவதற்கான வழிகளை
கண்டறியும்படி மாணவர்
களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வெற்றியை அடைய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் தரமான நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.
இணை
தலைவர் ஐஸ்வர்யா, வெற்றியை அடைய கடினமாக உழைக்கவும், திறன்களை
மேம்படுத்திக்கொள்ளவும், மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
செயலர் பிரபாகரன், மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறநெறிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினார்.
முதல்வர்
முனுசாமி விஸ்வநாதன், விழா அறிக்கையை சமர்ப்பித்தார். அதில்
கல்லுாரி, 'நாக்' அமைப்பிடமிருந்து மிக உயர்ந்த அங்கீகாரமான, 'ஏ
பிளஸ் பிளஸ்' தரம் பெற்றுள்ளது, அண்ணா பல்கலை, ஏ.ஐ.சி.டி.இ.,
ஆகியவற்றால் தன்னாட்சி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
உள்ளிட்ட, கல்லுாரியின் சிறப்புகளை தெரிவித்தார்.
சிறப்பு
விருந்தினரான, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா,
கவுரவ விருந்தினரான, ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின், வளாக
தொடர்பு பிரிவு இயக்குனர் பிரசாத், 250 மாணவர்களுக்கு
பட்டச்சான்றிதழ்களை வழங்கினர்.
