ADDED : ஜூன் 24, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
சேலம்:தமிழகத்தில்
மண்டல டவுன் பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர், 14 பேரை இடமாற்றம்
செய்து அரசு கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று
உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் உதவி இயக்குனர் சுலைமான் சேட்
திருநெல்வேலிக்கும், அங்கு பணியாற்றிய கிறிஸ்டோபர் தாஸ்
திருச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் காஞ்சிபுரம்
குருராஜன் - உதகை; வேலுார் ஞானசுந்தரம் - மதுரை; தர்மபுரி கணேஷ் -
காஞ்சிபுரம்; ஈரோடு வெங்கடேசன் - வேலுார்; கோவை மனோரஞ்சிதம் -
ஈரோடு; கடலுார் முகமது ரிஸ்வான் - சேலம்; தஞ்சாவூர் மாஹின் அபுபக்கர் -
கோவை; மதுரை மணிகண்டன் - தர்மபுரி; திருச்சி துவாரகனாத் சிங் -
தஞ்சாவூர்; சிவகங்கை விஜயலட்சுமி - திருவள்ளூர்; உதகை சரவணகுமார் -
கடலுார்; சென்னை கணேசன் - சிவகங்கைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
