/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.50 கோடி மோசடி:2 ஆண்டுக்கு பின்மேலாளருக்கு 'காப்பு'
/
ரூ.1.50 கோடி மோசடி:2 ஆண்டுக்கு பின்மேலாளருக்கு 'காப்பு'
ரூ.1.50 கோடி மோசடி:2 ஆண்டுக்கு பின்மேலாளருக்கு 'காப்பு'
ரூ.1.50 கோடி மோசடி:2 ஆண்டுக்கு பின்மேலாளருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 02, 2025 01:43 AM
ரூ.1.50 கோடி மோசடி:2 ஆண்டுக்கு பின்மேலாளருக்கு 'காப்பு'
சேலம்,: வாழப்பாடி, குறிச்சியை சேர்ந்தவர் ஜெயராமன், 68. சுற்றுவட்டார பகுதிகளில் பாக்கு மரங்களை குத்தகைக்கு எடுத்து, வியாபாரம் செய்கிறார். இவரது நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல், 50, அவரது மகன் தினேஷ், 30, ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த தெய்வ சிகாமணி, 33, ஆகியோர் மேலாளர்களாக பணியாற்றினர். இந்த மூவரும் சேர்ந்து, 1.50 கோடி ரூபாயை, ஜெயராமனுக்கு தெரியாமல் மோசடி செய்து திருடியுள்ளனர்.
இதுகுறித்து, 2023 பிப்ரவரியில் ஜெயராமன் அளித்த புகார்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, பண மோசடி, நம்பிக்கை துரோகம் உள்பட, 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இரு ஆண்டுக்கு பின், இந்த வழக்கில் நேற்று தினேைஷ கைது செய்தனர்.