ADDED : ஜன 05, 2026 04:53 AM
ஓமலுார்: ஓமலுார் சட்டசபை தொகுதியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 1,000 பேர், த.வெ.க.,வில் இணையும் விழா, வேலா-கவுண்டனுாரில் நேற்று நடந்தது. சேலம் வடமேற்கு மாவட்டம் சார்பில் நடந்த விழாவுக்கு, மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதில் 1,000 பேர், சேலம் மத்திய மாவட்ட-செயலர் பார்த்திபன் முன்னிலையில், த.வெ.க.,வில் இணைந்-தனர். ஓமலுார் மேற்கு ஒன்றிய செயலர் சீனிவாசன், ஓமலுார் நகர செயலர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் மேட்டூர், கருமலைக்கூடலில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், த.வெ.க.,வில் இணையும் குடும்ப விழா நடந்தது. மத்திய, மேற்கு மாவட்ட செயலர்கள் பார்த்திபன், செல்வம் முன்னி-லையில், 500க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் இணைந்தனர். சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூவண்ணன் ஜெமினி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
