/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய சிறையில் புக்கிங் முறையில் கைதிகளை பார்த்த 155 பார்வையாளர்
/
மத்திய சிறையில் புக்கிங் முறையில் கைதிகளை பார்த்த 155 பார்வையாளர்
மத்திய சிறையில் புக்கிங் முறையில் கைதிகளை பார்த்த 155 பார்வையாளர்
மத்திய சிறையில் புக்கிங் முறையில் கைதிகளை பார்த்த 155 பார்வையாளர்
ADDED : அக் 08, 2024 03:34 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில், நேற்று முதல் நாளில் கைதிகளை பார்க்க புக்கிங் முறையில், 155 உறவினர்கள் வந்தனர்.
தமிழகத்தில் உள்ள, மத்திய சிறைகளில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், முன்பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகி-றது. சேலம் மத்திய சிறையில், 326 தண்டனை கைதிகள், 870 விசாரணை கைதிகள், 65 தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம், 1,261 பேர் உள்ளனர்.கைதி ஒருவரை நாளை பார்க்க வேண்டும் என்றால், இன்றே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். 45 நிமிடங்களுக்கு முன்பே சிறைக்கு வந்து விட வேண்டும், அங்கு முன்பதிவு செய்-ததை சரி பார்க்கப்பட்டு, கைதியை பார்க்க வருபவர்களின் புகைப்படம், மொபைல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்-யப்பட்டு, பின்னர் அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் பாது-காப்பாக வைக்கப்பட்டு, அனுமதிக்கப்படுவர்.
முன் பதிவிற்கு 0427-2900049, 2400630 ஆகிய எண்கள் அறி-விக்கப்பட்டுள்ளன. கைதிகளை சந்திக்க வருவோரிடம் காலை, 9:00 முதல் மாலை 4:15 வரை, 10 பிரிவுகளாக நேர்காணல் நடத்-தப்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சந்-திக்க அனுமதி கிடையாது. அதன்படி நேற்று, சேலம் மத்திய சிறையில் கைதிகளை பார்ப்பதற்கு நேற்று முன்தினம், 155 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அதன்படி அனைவரும் நேற்று வந்-தனர்.

