sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3வது சிறப்பு தீவிர திருத்த முகாம் 15,883 பேர் விண்ணப்பிப்பு

/

3வது சிறப்பு தீவிர திருத்த முகாம் 15,883 பேர் விண்ணப்பிப்பு

3வது சிறப்பு தீவிர திருத்த முகாம் 15,883 பேர் விண்ணப்பிப்பு

3வது சிறப்பு தீவிர திருத்த முகாம் 15,883 பேர் விண்ணப்பிப்பு


ADDED : ஜன 04, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முகாமில், 15,883 பேர் விண்ணப்பம் செய்துள்-ளனர். இது கடந்த இரு முகாம்களை விட குறைவாகும்.

நடப்பு, 2026க்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 19ல் வெளியிடப்பட்டு, சிறப்பு தீவிர திருத்தும் பணி வரும், 18 வரை நடக்கிறது. அதை செம்மைப்படுத்த, 3வது சிறப்பு தீவிர திருத்த முகாம், நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 1,346 மையங்களில் உள்ள, 3,468 ஓட்டுச்சாவடிகளில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடத்தப்பட்டது.

பெயர் சேர்க்க, 9,528 பேர் மனு அளித்தனர். அதில் அதிக

பட்சமாக சேலம் வடக்கு தொகுதியில், 1,149 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. பெயர் நீக்க, 304 பேர்; குடியிருப்பு, முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளி என குறிப்பிட உள்ளிட்டவற்றுக்கு, 6,051 பேர் என, மொத்தம், 15,883 பேர் விண்ணப்பம் வழங்கி உள்ளனர்.

சட்டசபை தொகுதி வாரியாக பெறப்பட்டுள்ள மொத்த மனுக்கள் விபரம் வருமாறு(அடைப்பில் பெயர் சேர்க்கைக்கான மனு எண்ணிக்கை):

கெங்கவல்லி தனி - 1,383(843); ஆத்துார் தனி - 1,422(797); ஏற்காடு தனி - 1,142(693); ஓமலுார் - 1,578(760); மேட்டூர் - 1,957(1,043); இடைப்பாடி - 1,394(709); சங்ககிரி - 1,021(622); சேலம் மேற்கு - 1,568(958); சேலம் வடக்கு - 1,600(1,149); சேலம் தெற்கு - 1,441(1,131); வீரபாண்டி - 1,377(823).

ஏற்கனவே கடந்த, 27, 28ல் நடந்த இரு முகாம்களில், 46,444 மனுக்கள் பெறப்பட்டன. இத்துடன் சேர்த்து, பெயர் சேர்க்க, 41,339; நீக்க, 997; குடியிருப்பு, முகவரி திருத்தம், மாற்றுத்திற-னாளி என உள்ளிட்டவை கேட்டு, 19,991 பேர் என, 3 முகாம்-களில், 62,327 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தொடர்ந்து இன்று நடக்கும், 4வது முகாமுடன் சிறப்பு முகாம் நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us