/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை
ADDED : அக் 12, 2024 01:16 AM
உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்துார், இளம்பிள்ளை உள்ளிட்ட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று ஆயுதபூஜையை முன்னிட்டு, அதிகாலை முதலே மக்கள் காய்கறி, பழங்கள் வாங்குவதற்காக, உழவர் சந்தைகளில் குவிய தொடங்கினர். சேலம்
மாநகரில் உள்ள தாதகாப்பட்டி,
சூரமங்கலம், அஸ்தம்பட்டி உழவர்
சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.
நேற்று மாவட்டத்தின் அனைத்து உழவர் சந்தைகளிலும், 279.88 டன் காய்கறிகள், 69.37 டன் பழங்கள், 2.58 டன் பூ வகைகள் உள்ளிட்ட 361.84 டன் அளவுள்ள பொருட்கள், ரூ.1.65 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக தாதகாப்பட்டியில், 31.06 லட்சம், ஆத்துாரில் 27.52 லட்சம், சூரமங்கலத்தில், 27.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.