தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 17 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்கீடு

17 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்கீடு

17 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்கீடு


ADDED : மே 27, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாநகருக்கு மாற்றப்பட்ட, 17 இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடம் ஒதுக்கி, மாநகர் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.

அதன்படி சட்டம் ஒழுங்குக்கு, கலைவாணி - அஸ்தம்பட்டி; கார்த்திகேயன் - அன்னதானப்பட்டி; பால்ராஜ் - கிச்சிப்பாளையம்; சிவசங்கரன் - இரும்பாலை; பிரகாஷ் - ஆட்டையாம்பட்டி; சதீஷ்குமார் - அம்மாபேட்டை; ஜெகநாதன் - கன்னங்குறிச்சி; அம்பிகா - வீராணம்; குற்றப்பிரிவுக்கு, சந்திர கலா - மாநகர்; செல்வராஜ் - கிச்சிப்பாளையம்; சாரதா - சூரமங்கலம்; மணிவண்ணன் - பள்ளப்பட்டி என, பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சின்னதங்கம் - அரசு மருத்துவமனை; பாபு சுரேஷ்குமார் - காரிப்பட்டி; சிவகாமி - சூரமங்கலம் மகளிர் பிரிவு; இந்திரா - வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு; கிட்டு - ஆயுதப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் இடமாற்றம்கிச்சிப்பாளையம் குமார், சேலம் டவுன் சட்டம் ஒழுங்குக்கும், கன்னங்குறிச்சி சுபாஷ், மதுவிலக்கு பிரிவுக்கும், அம்மாபேட்டை குற்றப்பிரிவு பங்கஜம், அம்மாபேட்டை மகளிர் ஸ்டேஷனுக்கும், வீராணம் சங்கீதா, பேர்லண்ட்ஸ் ஸ்டேஷக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us