/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 மாவட்டத்தில் 170 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
2 மாவட்டத்தில் 170 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 22, 2025 05:48 AM
சேலம்: ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 170 பேர், இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், குள்ளம்பாளையத்தை சேர்ந்த தொழில் அதிபரான, ஹரிணி குரூப்ஸ் சண்முகசுந்தரம் ஏற்-பாட்டில், அப்பகுதியில், தி.மு.க., காங்., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது. அவர்கள், சேலம், நெடுஞ்சாலை நகரில், பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ஈரோடு புறநகர் மாவட்ட செயலர்களான, கிழக்கு கருப்பண்ணன், மேற்கு செல்-வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி தெற்கு ஒன்றிய, நெசவாளர் அணி செயலர் வெங்கிடுசாமி ஏற்பாட்டில், 20 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சேலம் மாவட்டம் வனவாசி டவுன் பஞ்சாயத்து செயலர் நந்தகுமார் ஏற்பாட்டில், 50 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அமைப்பு செயலர் சந்திரசேகரன், நங்கவள்ளி வடக்கு ஒன்றிய செயலர் மாணிக்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள்
உடனிருந்தனர்.

