தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கார் பட்டறை ஓனரை தாக்கிய 2 பேர் கைது

கார் பட்டறை ஓனரை தாக்கிய 2 பேர் கைது

கார் பட்டறை ஓனரை தாக்கிய 2 பேர் கைது


ADDED : ஏப் 27, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கோமாளியூரை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 51. இவர் வெள்ளாளப்பட்டி, வட்டக்காட்டில் வசித்து, கார் பட்டறை வைத்துள்ளார்.

கோமாளியூரில் வெங்கடா-ஜலம் தரப்புக்கும், கந்தசாமி தரப்புக்கும் நிலப்பிரச்சனை இருந்-தது. கடந்த, 23ல் கந்தசாமி குடும்பத்தினர், வழிப்பாதையில் மண் கொட்டி வைத்திருந்தனர். இதுகுறித்து வெங்கடாஜலம் கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு காளியம்மன் கோவில் பகுதியில் இருந்த வெங்கடாஜ-லத்தை, 4 பேர் கட்டையால் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். அவர் புகார்படி தாரமங்கலம் போலீசார், கந்தசாமி மகன் தங்கமணி, அவரது உறவினர் வினோத் உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில், தங்கமணி, வினோத்தை நேற்று முன்தினம் கைது செய்து மற்ற இருவரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us