/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உணவக பங்குதாரர்களுடன் மோதல் 'ஏர்-கன்'னால் சுட முயன்ற 2 பேர் கைது
/
உணவக பங்குதாரர்களுடன் மோதல் 'ஏர்-கன்'னால் சுட முயன்ற 2 பேர் கைது
உணவக பங்குதாரர்களுடன் மோதல் 'ஏர்-கன்'னால் சுட முயன்ற 2 பேர் கைது
உணவக பங்குதாரர்களுடன் மோதல் 'ஏர்-கன்'னால் சுட முயன்ற 2 பேர் கைது
ADDED : அக் 10, 2025 03:36 AM
மேட்டூர், மேச்சேரி அருகே குடும்ப உணவக பங்குதாரர்களை, ஏர்-கன்னால் சுட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட் டம், மேச்சேரி எம்.காளிப்பட்டி அமரத்தானுார் ராஜா,31, மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், விக்னேஷ் ஆகியோர் பங்குதாரர்களாக சேர்ந்து மேச்சேரி-மேட்டூர் நெடுஞ்சாலையோரம் எம்.காளிப்பட்டி அருகே குடும்ப உணவகம் நடத்துகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு மேட்டூர் குஞ்சாண்டியூர் ரஞ்சித்,28, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் அறிவழகன், 24, சுந்தரராஜன், 27, மேச்சேரி முருகேஷ் ஆகிய நால்வரும் மதுபோதையில் உணவகத்துக்கு சென்று சாப்பிட்டனர். அப்போது, உணவகத்தில் ஸ்பீக்கர் ஒலித்த பாடல் சத்தம் அதிகமாக இருந்ததால், அதை குறைக்குமாறு நால்வரும் பங்குதாரர் விக்னேஷிடம் கூறியுள்ளனர்.அதனால், விக்னேஷ் ஸ்பீக்கரை ஆப் செய்து விட்டார். இதனால் நால்வரும் கோபம் அடைந்தனர்.
அப்போது ரஞ்சித், தன் டயோடா காரில் இருந்து ஏர்கன் துப்பாக்கியை எடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து ேஹாட்டல் பங்குதாரர்களை சுட்டு எரித்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர். சம்பவம் குறித்து நேற்று மாலை, 6:30 மணிக்கு மேச்சேரி போலீசில் ராஜா புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார்,. ரஞ்சித், அறிவழகன் ஆகியோரை கைது செய்த நிலையில், தலைமறைவான சுந்தரராஜன், முருகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.