ADDED : ஏப் 14, 2026 06:42 AM
சேலம், சேலம் அம்மாபேட்டை பகுதியில், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலின்படி, அம்மா பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்மாபேட்டை, வைத்தி தெரு பகுதி அருகே தண்ணீர் டேங்க் பகுதியில் இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதையடுத்து இருவரையும், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மேச்சேரியை சேர்ந்த சக்திவேல், 26, சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த தினேஷ், 23, என்பதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்து பார்த்த போது, 1.900 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா, மொபைல்போன், 2, பஜாஜ் பிளாட்டினா பைக், எலக்ட்ரிக் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
