'போதை' மாத்திரை பறிமுதல் ரவுடி உள்பட 2 பேர் சிக்கினர்
'போதை' மாத்திரை பறிமுதல் ரவுடி உள்பட 2 பேர் சிக்கினர்
ADDED : நவ 27, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார் நேற்று, அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மரப்பாலம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, 2 பேரை பிடித்து விசாரித்தபோது, செவ்வாய்ப்பேட்டை, பெரியார் நகர் அர்ஜூன், 27, அம்மாபேட்டை, சாஸ்திரி நகரை சேர்ந்த, ரவுடி நாகராஜ், 26, என தெரிந்தது.
அவர்கள் பையை சோதனை செய்தபோது, 133 'டேப்பென்டடோல்' மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்ததில், 'போதை'க்கு அந்த மாத்திரைகளை விற்க வைத்திருந்தது தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
