தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

2 கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

2 கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஏப் 03, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,இளம்பிள்ளை ஏரிக்கரை மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் பங்குனி திருவிழா, கடந்த மார்ச், 24ல் தொடங்கியது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம், தீ மிதி விழா நடந்தது. அன்றிரவு அம்மனை சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்து, தொடர்ந்து வட கயிறுகள் பூட்டி, தேரை நகர்த்தி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, 8:30 மணிக்கு மாரியம்மன் கோவில் முன்பிருந்த தேரை, ஏராளமான பக்தர்கள், 'ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் எழுப்பி, வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர்.

'கோவிந்தா' கோஷம்

ராக்கிப்பட்டி அருகே செங்கோடம்பாளையம் சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு சுவாமியை மலையில் இருந்து இறக்கி, தேரில் எழுந்தருளச்செய்தனர்.

மாலை, 4:00 மணிக்கு முதலில் சிறு திருவடியான ஆஞ்சநேயர் தேரை, குழந்தைகள், இளைஞர்கள் வடம் பிடித்து இழுத்து, மலைக்கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் வீற்றிருந்த பெரிய தேரை ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க இழுத்து மலைக்கோவிலை சுற்றி வந்தனர். இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது.

அதேபோல் அரியானுார் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் அக்னி கரகம், பூங்கரகம், மாவிளக்கு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

5 நாள் தேரோட்டம் ஆரம்பம்

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவிலில், கடந்த, 26ல் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 5 நாள் தேரோட்டம், நேற்று மாலை, 6:30 மணிக்கு தொடங்கியது. முதல் தேரில் விநாயகர், இரண்டாவது தேரில் சோமேஸ்வரர், மூன்றாவதாக, பிரமாண்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி எழுந்தருளினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், நிலையில் இருந்து தேர்களை வடம் பிடித்து இழுத்து, அதே தெருவின் இறுதியில் நிறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us