ADDED : நவ 11, 2026 06:33 AM
சேலம்:சேலம்,
ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்த ரவுடி டேவிட், 40. இவர் கடந்த
அக்., 26ல், புது ரோடு அருகே, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த
வழக்கில் இதுவரை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில்
சேலம், அல்லிக்குட்டையை சேர்ந்த மணிகண்டன், 27, மாரியம்மன் கோவில்
தெரு கார்த்திக், 23, அடங்குவர். இதில் மணிகண்டன் மீது, 2023ல் நடந்த
அடிதடி வழக்கு, அம்மாபேட்டை போலீசில் நிலுவையில் உள்ளது. அதேபோல்
கார்த்திக் மீது, 2024 மற்றும் நடப்பாண்டில், அடிதடி வழக்கு தொடர்பாக,
வீராணம், கன்னங்குறிச்சி ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன.
இருவரும்
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, குண்டர்
சட்டத்தில் கைது செய்ய, மாநகர் போலீஸ் கமிஷனர் பாபு, நேற்று
உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மத்திய சிறையில் ஓராண்டுக்கு,
இருவரும்
அடைக்கப்பட்டனர்.
