தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லாரியில் முந்துவது தொடர்பாக தகராறு சிலை கரைக்க வந்த 2 குழுவினர் மோதல்

லாரியில் முந்துவது தொடர்பாக தகராறு சிலை கரைக்க வந்த 2 குழுவினர் மோதல்

லாரியில் முந்துவது தொடர்பாக தகராறு சிலை கரைக்க வந்த 2 குழுவினர் மோதல்


ADDED : செப் 17, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; விநாயகர் சதுர்த்தி, கடந்த, 14ல் கொண்டாடப்பட்-டது. அன்று முதல், சேலத்தின் பல்வேறு பகுதி-களில் இருந்து ஏராளமான பக்தர்கள், லாரிகளில் சிலைகளை மேட்டூர் கொண்டு வந்து கரைக்கின்-றனர். அதேபோல் நேற்று மதியம், மேட்டூர் கிழக்கு நெடுஞ்சாலையின் இருபுறமும், லாரிகள் நீண்ட வரிசையில் நின்றன.

அதில் மதியம், 1:00 மணிக்கு, சேலத்தில் இருந்து இரு லாரிகளில் விநாயகர் சிலைகளை ஏற்றி வந்த இரு குழுவினர் இடையே, முந்திச்செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் லாரிகளில் இருந்து இறங்கி ஒரு-வரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டு-களை தள்ளிவிட்டனர். இதை அறிந்து, அங்கு வந்த மேட்டூர் போலீசார், தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின் இரு தரப்பினரும், அவர்களது லாரிகளில் ஏறி, சிலை-களை கரைக்க சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us