ADDED : அக் 04, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்,
இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்
கோபாலகிருஷ்ணன், 45. மேட்டூர் ஒர்க் ஷாப் அருகே மீன்கடை
வைத்துள்ளார்.
அருகே உள்ள காவிரிபாலத்தை சேர்ந்தவர்கள் காமராஜ்,
மெய்யழகன். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு கிழக்கு பிரதான
சாலையிலுள்ள பழைய இருசக்கர வாகன விற்பனை கடையில், அதன் உரிமையாளர்
சிவகுமாரிடம், கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது
அந்த வழியே நடந்து சென்ற காமராஜ், மெய்யழகன் ஆகியோர், 'எங்களை ஏன்
முறைத்து பார்க்கிறாய்' என கேட்டு கோபாலகிருஷ்ணனை தாக்கினர். காயம் அடைந்த அவர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் போலீசார்,
காமராஜ், மெய்யழகனை தேடுகின்றனர்.
