/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கவனக்குறைவாக செயல்பட்ட சிறை போலீசார் 2 பேர் 'சஸ்பெண்ட்'
/
கவனக்குறைவாக செயல்பட்ட சிறை போலீசார் 2 பேர் 'சஸ்பெண்ட்'
கவனக்குறைவாக செயல்பட்ட சிறை போலீசார் 2 பேர் 'சஸ்பெண்ட்'
கவனக்குறைவாக செயல்பட்ட சிறை போலீசார் 2 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 14, 2024 07:45 AM
சேலம்: கைதியை, சக கைதிகள் தாக்கிய விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட, 2 போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 19. போதைப்பொருள் வழக்கில் கைதாகி, ஆத்துார் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, கடந்த, 10ல் சக கைதிகளான, ஆசிக் அலி, கார்த்தி, சதீஷ், சூர்யா, ரவிச்சந்திரன் தாக்கினர்.
இதுதொடர்பாக சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், நேற்று முன்தினம் விசாரித்தார். பின் தாக்குதல் நடத்திய, 5 பேர் மீதும் ஆத்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அந்த, 5 பேரும் அவர்களது
உறவினர்களை சந்திக்க, 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. தவிர ஆஷிக் அலியை தவிர்த்து, மற்ற, 4 பேரும், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.இந்நிலையில் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்ட, ஆத்துார் கிளை சிறை போலீஸ்காரர்கள் செந்தில்குமார், 48, ராஜவர்மன், 30, ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று எஸ்.பி., உத்தரவிட்டார்.

