ADDED : அக் 05, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகை திருடிய 2 பேர் கைது
சேலம், அக். 5-
சேலம், பள்ளப்பட்டி, ராம் நகரை சேர்ந்தவர் கஸ்துாரி, 34. தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கடந்த, 27ல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இரவு, 9:00 மணிக்கு வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடுபோனது தெரிந்தது.
அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரணையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த ஹரிசந்திரன், 19, சேலம், பள்ளப்பட்டி, ஆலமரக்காடு சந்தோஷ்குமார், 20, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.