/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்
/
போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்
போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்
போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்
ADDED : ஆக 22, 2025 01:45 AM
சேலம், சேலம், வீராணம் போலீசார், ஆச்சாங்குட்டப்பட்டியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, குஜராத் பதிவெண் கொண்ட கார் நிறுத்தாமல் சென்றது. தொடர்ந்து கார் வேகமாக சென்றதால், போலீஸ் தரப்பில் உஷார்படுத்தப்பட்டது.
ஏற்காடு போலீசார், கொட்டச்சேடு சாலை குறுக்கே வேனை நிறுத்தி காத்திருந்தபோது, வேகமாக வந்த அந்த கார் மோதி நின்றது. ஆனால் காரில் இருந்தவர்கள் இறங்கி, போலீசாரிடம் சிக்காமல் தப்பினர். காரில் சோதனை செய்தபோது, புகையிலை பொருட்கள் இருந்தன. தொடர்ந்து, புட்டமாத்திக்காடு பகுதியில் இருந்த இருவரையும், மக்கள் உதவியுடன், வீராணம் போலீசார் பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் சிங், 24, சுரேஷ், 23, என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து, வாழப்பாடி, மேட்டுப்பட்டியில் வினியோகித்ததும், அதன்மூலம், 1.61 லட்சம் ரூபாய் வாங்கியதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.