ADDED : ஏப் 30, 2026 02:38 AM
சேலம்:சேலம், அழகாபுரம், மோளப்பட்டியான் வட்டத்தை சேர்ந்த கமலா மகன் குமரேசன், 56. பி.பார்ம்., முடித்துவிட்டு அருகே உள்ள மருந்தகத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சில ஆண்டாக உடல் நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த, 20ல் தாயிடம் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் கமலா நேற்று அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார்
தேடுகின்றனர்.
அதேபோல் சேலம் அருகே சேலத்தாம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகள் கவுசல்யா, 29. எம்.எஸ்சி., முடித்துள்ள இவர், சேலம், 5 ரோட்டில் உள்ள தனியார் மாலில் பணியாற்றுகிறார். கடந்த, 27ல் பணிக்கு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்ப-வில்லை. இதுகுறித்து அவரது தாய் சின்னப்பொண்ணு நேற்று முன்தினம் அளித்த புகார்படி,
சூரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
