ADDED : ஏப் 06, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி: வாழப்பாடி, பி.கரடிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மணி-கண்டன், 31. இவர் போதையில், அவரது தாய் ஜோதியிடம் தகாத முறையில் நடக்க முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த ஜோதி, அவரை அடித்துக் கொலை செய்தார். அவரை, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சாட்சியை மறைத்ததாக, மணிகண்டனின் தந்தை சின்-னப்பன், 65, அவரது சகோதரி கணவரான, சுக்கம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 45, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'ஜோதி, கல்லால் தாக்கி கொன்ற நிலையில், மணிகண்டன் உடலை பாக்கு தோப்பில் புதைக்க, சின்னப்பன், சக்திவேல் உதவினர். அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்' என்றனர்.
