ADDED : ஏப் 06, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி:வாழப்பாடி,
பி.கரடிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன், 31. இவர் போதையில்,
அவரது தாய் ஜோதியிடம் தகாத முறையில் நடக்க முயன்றார்.
இதில்
ஆத்திரமடைந்த ஜோதி, அவரை அடித்துக் கொலை செய்தார். அவரை, வாழப்பாடி
போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சாட்சியை மறைத்ததாக,
மணிகண்டனின் தந்தை சின்னப்பன், 65, அவரது சகோதரி கணவரான,
சுக்கம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 45, ஆகியோரை, நேற்று கைது
செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஜோதி, கல்லால் தாக்கி கொன்ற
நிலையில், மணிகண்டன் உடலை பாக்கு தோப்பில் புதைக்க, சின்னப்பன்,
சக்திவேல் உதவினர். அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்' என்றனர்.
