/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போட்டோகிராபரை தாக்கிய வாலிபர் உள்பட 2 பேர் சிக்கினர்
/
போட்டோகிராபரை தாக்கிய வாலிபர் உள்பட 2 பேர் சிக்கினர்
போட்டோகிராபரை தாக்கிய வாலிபர் உள்பட 2 பேர் சிக்கினர்
போட்டோகிராபரை தாக்கிய வாலிபர் உள்பட 2 பேர் சிக்கினர்
ADDED : அக் 18, 2025 01:00 AM
ஓமலுார், நங்கவள்ளி, கணக்குப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக், 32. போட்டோகிராபரான இவர், தொளசம்பட்டியில் உள்ள ஸ்டுடியோவில் பணிபுரிகிறார்.
இவரது கடைக்கு பூம்பட்டியிலிருந்து, திருமணமான பெண் ஒருவர் பணம் அனுப்ப வந்து, ஸ்டுடியோ நம்பரை வாங்கிச்சென்றார். 3 நாட்களுக்கு பின், ஸ்டுடியோ நம்பருக்கு, 'நான் உங்களை பார்க்க வேண்டும்' என, குறுந்தகவல் வந்தது.
அதற்கு கடையில் பணிபுரியும் பெண், 'வாட்' என கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பணம் அனுப்ப வந்த பெண்ணின் கணவர் பாலு, 30, அவரது நண்பர் மணிகண்டன், 33, ஆகியோர், ஸ்டுடியோ சென்று, கார்த்திக்கிடம், 'ஏன் தகவல் அனுப்பினாய்' என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கார்த்திக்கை
தாக்கினர். காயம் அடைந்த அவர், மேட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் நேற்று முன்தினம், பாலு, மணிகண்டனை கைது செய்தனர்.--------------------------