/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி கடத்தல் 2 பேருக்கு 'காப்பு'
/
ரேஷன் அரிசி கடத்தல் 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 26, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், லைன்மேட்டில், புட்செல் போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்கு மூட்டை-யுடன் மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்-ததில், 350 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், அம்மாபேட்டையை சேர்ந்த கனகராஜ், 32, அன்னதானப்பட்டி விஜி, 38, என்பதும், இருவரும் மக்க-ளிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மொத்த-மாக சேர்த்து அதை, மாட்டு தீவனம், ஓட்டலுக்கு அதிக விலைக்கு விற்கும் தொழில் செய்வது தெரிந்தது. இதனால் மொபட்டுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.