/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தை தத்தெடுத்து தருவதாக மோசடி ரூ.3 லட்சம் பறிப்பில் 2 பேர் 'சரண்'
/
குழந்தை தத்தெடுத்து தருவதாக மோசடி ரூ.3 லட்சம் பறிப்பில் 2 பேர் 'சரண்'
குழந்தை தத்தெடுத்து தருவதாக மோசடி ரூ.3 லட்சம் பறிப்பில் 2 பேர் 'சரண்'
குழந்தை தத்தெடுத்து தருவதாக மோசடி ரூ.3 லட்சம் பறிப்பில் 2 பேர் 'சரண்'
ADDED : நவ 20, 2025 02:40 AM
சேலம்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார், குருசாமிபுரத்தை சேர்ந்தவர் பாதமுத்து, 45; ஐஸ் வியாபாரி. இவரது மனைவி பூண்டிமாதா, 40. இவர்களுக்கு, 23 ஆண்டாக குழந்தை இல்லை. இதுகுறித்து சித்தப்பா மகள் செல்வியிடம், பாதமுத்து தெரிவித்தார். அவர் மூலம், அவரது ஆண் நண்பரான, சேலத்தை சேர்ந்த அருண்குமார், குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூற, அதை நம்பிய, பாதமுத்து, 3 லட்சம் ரூபாயுடன், வாடகை காரில் கடந்த, 10 இரவு சேலம் வந்தார். குடும்பத்தினர், உறவினர்கள் உடன் வந்தனர்.
மறுநாள், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, அருண்குமார் ஆலோசனைப்படி, அவரது காரை பின் தொடர்ந்தபடி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி அருகே சென்றதும், அங்கு இரு கார்களும், 100 அடி இடைவெளியில் நின்றன. அங்கு, பாதமுத்து வின் தம்பி முனியப்பன், மச்சான் மகேஷ் ஆகியோர், 3 லட்சம் ரூபாயை எடுத்துச்சென்று கொடுக்க, அதை வாங்கி கொண்ட அருண்குமார், பணத்தை அபகரிக்க போட்ட திட்டப்படி, அங்கு, 'கிறிஸ்டா' காரில், 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ்காரர் என்றும், மற்றொருவர், ஈரோடு கிரைம் இன்ஸ்பெக்டர் என்றும் அறிமுகம் செய்து கொண்டனர். பின் முனியப்பன், மகேஷ் ஆகியோரை, குழந்தை கடத்தும் கும்பல் மிரட்டி, அவர்களிடமிருந்த, 3 லட்ச ரூபாயை பறித்துக்கொண்டதோடு, அவர்களை காரில் கடத்தி சென்றனர். பின் கடத்தல் கும்பல் சீலநாயக்கன்பட்டியில் இருவரையும் தள்ளிவிட்டு தப்பினர்.
பாதமுத்து புகார்படி, 17ல், கருப்பூர் போலீசார் விசாரித்து, அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்த மதுராஜ், 37, போலீசாக நடித்த தாதகாப்பட்டி வசந்தம் நகர் ஏசுராஜ், 27, ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அன்னதானப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த அருண்குமார், 27, அவனது கூட்டாளியான, போலி இன்ஸ்பெக்டரை, போலீசார் தேடினர்.
இந்நிலையில், அருண்குமார், கொண்டலாம்பட்டி, சிவதாபுரத்தை சேர்ந்த பழனிபாரதி, 29, ஆகியோர், நேற்று, சேலம் ஜே.எம்., 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பின் போலீசாரின் கோரிக்கைப்படி, இருவருக்கும் ஒருநாள் நீதிமன்ற காவல் அனுமதித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி விசாரணைக்கு பின், இன்று மாலை, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்
படுவர் என, போலீசார் தெரிவித்தனர்.

