/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே பெயரில் 2 பள்ளிகள்; ஆனா ஒரு ஹெச்.எம்., தான்! ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
/
ஒரே பெயரில் 2 பள்ளிகள்; ஆனா ஒரு ஹெச்.எம்., தான்! ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
ஒரே பெயரில் 2 பள்ளிகள்; ஆனா ஒரு ஹெச்.எம்., தான்! ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
ஒரே பெயரில் 2 பள்ளிகள்; ஆனா ஒரு ஹெச்.எம்., தான்! ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2024 01:17 AM
தாரமங்கலம்: ஒரே பெயரில் இரு பள்ளிகள் செயல்படும் நிலையில் அதற்கு ஒரு தலைமை ஆசிரியை மட்டும் உள்ளார். அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக, பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில், 20வது வார்டு கிழக்கு பாவடி மற்றும் 13வது வார்டு நல்லகிணறு அருகே என, இரு இடங்களில் தெற்கு ரத வீதி பெயரில் அரசு தொடக்கப்-பள்ளிகள் உள்ளன. கிழக்கு பாவடி பள்ளியில், 110 மாணவர்கள் படிக்கின்றனர்.
தலைமையாசிரியை ஜெயந்தி உள்பட, 4 ஆசிரி-யர்கள் உள்ளனர். அதே தலைமை ஆசிரியை கட்டுப்பாட்டில், பல ஆண்டுகளாக நல்லகிணறு தொடக்கப்பள்ளியும் செயல்படுகிறது. அங்கு, 73 மாணவர்கள், இரு ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு ஆசிரியர், ஒன்று முதல், 3ம் வகுப்புக்கும், மற்றொரு ஆசிரியர், 4, 5ம் வகுப்புக்கும் பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் என, பெற்றோர் குற்றம்சாட்டி, கூடுதல் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மதிய உணவு, கிழக்கு பாவடி பள்ளியில் தயார் செய்து அங்குள்ள மாணவர்களுக்கு பரிமாறப்படுகிறது. அதற்கு பின் சமையல் உதவியாளர், பாத்திரத்தை தலையில் சுமந்து சங்ககிரி சாலையை கடந்து சென்று தெற்கு ரத வீதியில் உள்ள மாணவர்க-ளுக்கு மதிய உணவு வழங்குகிறார். இதற்கு, அரை கி.மீ., சமையல் பாத்திரத்தை தலையில் சுமந்து செல்வது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க, தனித்தனி பள்ளியாக செயல்பட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் அமலா கூறுகையில், ''இரு பள்ளிகளும் ஒரே பெயரில் உள்ளன. 200 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் கூடுதல் ஆசிரியர் நியமிக்க முடியும். இல்லை எனில் நல்லகிணறு பள்ளிக்கு தனி தலைமை ஆசிரியர் நிய-மித்தால் தீர்வு கிடைக்கும்,'' என்றார்.
தாரமங்கலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜீ கூறு-கையில், ''இரண்டையும் தனித்தனி பள்ளியாக கொண்டு வர நட-வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர்
நல்லகிணறு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுமுறையில் சென்றால் ஒரே ஆசிரியர், 5 வகுப்புகளுக்கு பாடம் நடத்துகிறார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பெற்றோர் பலர், குழந்-தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். இப்பள்ளிக்கு தனி தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். இரு பள்ளிகளும் தனித்-தனியே செயல்பட நடவடிக்கை தேவை.- எஸ்.கணேசன், 48, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகஇணை செயலர், மாணவரின் தந்தை, தாரமங்கலம்.
கழிப்பறையில் தண்ணீர் இல்லை
மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, கூடுதல் ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறை-யிலும் தண்ணீர் இன்றி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்-றனர். அதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜே.நாகலிங்கம், 40, தறித்தொழிலாளி,மாணவியின் தந்தை, தாரமங்கலம்.

