/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியையிடம் நகை பறிப்பு 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
/
ஆசிரியையிடம் நகை பறிப்பு 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : நவ 07, 2025 12:56 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை, செல்வ நகரை சேர்ந்தவர் அலமேலு, 59. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த ஏப்., 16ல், அங்குள்ள ஹோலிகிராஸ் பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், அலமேலு அணிந்திருந்த, 5.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். அ
லமேலு புகார்படி, வீராணம் போலீசார் வழக்குப்பதிந்து, கோவை, பிச்சானுாரை சேர்ந்த சையத் யூசுப், 58, திருப்பத்துார் மாவட்டம் தட்டான்குட்டையை சேர்ந்த கமலக்கண்ணன், 37, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம், ஜே.எம்.எண்: 4ல் நடந்தது. அதில் மாஜிஸ்திரேட் பூவராகவன் நேற்று, சையத் யூசுப், கமலக்கண்ணன் ஆகியோருக்கு தலா, 3 ஆண்டு சிறை தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

