/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணியில் அலட்சியமாக இருந்த 2 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
/
பணியில் அலட்சியமாக இருந்த 2 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
பணியில் அலட்சியமாக இருந்த 2 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
பணியில் அலட்சியமாக இருந்த 2 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
ADDED : செப் 12, 2025 02:25 AM
ஆத்துார், கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் ஆய்வு செய்தார். அப்போது, பணியில் அலட்சியமாகவும், பல்வேறு புகாருக்கு ஆளான எஸ்.எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், பெரியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ., பெரியசாமியை, மல்லுார் ஸ்டேஷனுக்கும், எஸ்.எஸ்.ஐ., பால்ராஜை கொங்கணாபுரம் ஸ்டேஷனுக்கும் பணியிடம் மாற்றம் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.
இதுகுறித்து, எஸ்.பி., கவுதம்கோயல் கூறுகையில், ''கடந்த ஒரு வாரத்தில், போலீஸ் ஸ்டேஷனில் பணியில் அலட்சியம், விசாரணை செய்யாமலும், பல்வேறு புகாருக்கு ஆளான எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ.,க்கள் என, 10 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புகார் பதிவு குறித்து பணிகள் மேற்கொள்ளாத வீரகனுார், ஏற்காடு வரவேற்பாளர் இருவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொங்கணாபுரத்தில், பணம் வாங்கும் வீடியோ விவகாரத்தில், எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., என, இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே ஸ்டேஷனில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் போலீசார் பட்டியல் தயார் செய்து, பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர். பணியில் அலட்சியம், புகாருக்குள்ளான போலீசார் மீது நடவடிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,'' என்றார்.