ADDED : நவ 26, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், நவ. 26-
சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உட்பட்ட சேலம் புது பஸ் ஸ்டாண்டில், மரக்கடை துணை அஞ்சலகம், இதுநாள் வரை செயல்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக, அவை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்று (நவ., 25) முதல், அழகாபுரம் துணை அஞ்சலகத்தில், தனி அலுவலகமாக செயல்படுகிறது.
அதேபோல, ஆத்துாரில் உள்ள அண்ணாதுரை பவளவிழா கட்டடத்தில், ஆத்துார் பஜார் துணை அஞ்சலகம் இதுநாள் வரை இயங்கி வந்தது. தற்போது, நிர்வாக காரணங்களாக அவை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்று முதல், ஆத்துார் தலைமை அஞ்சலகத்தில், தனி அலுவலகமாக செயல்படுகிறது.
இத்தகவலை, கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.