/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று 2 துணை அஞ்சலகம் மூடல் கிழக்கு கோட்ட தகுதி குறைப்பு?
/
இன்று 2 துணை அஞ்சலகம் மூடல் கிழக்கு கோட்ட தகுதி குறைப்பு?
இன்று 2 துணை அஞ்சலகம் மூடல் கிழக்கு கோட்ட தகுதி குறைப்பு?
இன்று 2 துணை அஞ்சலகம் மூடல் கிழக்கு கோட்ட தகுதி குறைப்பு?
ADDED : டிச 15, 2025 06:37 AM
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக கட்டுப்பாட்டில் தற்போது, 52 துணை அஞ்சலகங்கள் உள்ளன. கடந்த, 2 ஆண்டில் மரவனேரி, செவ்வாய்ப்-பேட்டை, மரக்கடை, சஞ்சீவிராயன்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, சேலம் கிழக்கு, பொன்னம்-மாபேட்டை, சேலம் கோட்டை, 2வது அக்ரஹா-ரத்தில் உள்ள தில்லை நகர் துணை அஞ்சல-கங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டன.
இந்நிலையில் காந்தி சாலையில் உள்ள சேலம் எக்ஸ்டென்சன் துணை அஞ்சலகம், நாராயணன் நகர் துணை அஞ்சலகம் ஆகியவை, இன்று முதல் மூடப்படுகிறது. இத்துடன் சேர்த்து, கிழக்கு கோட்டத்தில் மூடப்படும் துணை அஞ்சலக எண்ணிக்கை, 10 ஆக அதிகரித்து, அதன் மொத்த எண்ணிக்கை, 50 ஆக குறைகிறது.
நாளை முதல், சேலம் எக்ஸ்டென்சன் துணை அஞ்சலகம், அழகாபுரம் துணை அஞ்சலகத்து-டன், நாராயணன் நகர் துணை அஞ்சலகம், கிச்-சிப்பாளையம் துணை அஞ்சலகத்துடன் இணைக்-கப்பட்டு, ஒருசேர இயங்கும் என தெரிவிக்கப்பட்-டுள்ளது. இந்த விபரம், இரு துணை அஞ்சலக தகவல் பலகையில்
ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் அதிகாரிகள் கூறுகையில், 'துணை அஞ்சலகங்கள் மூடப்படுவதால், 'ஏ கிரேடு' தகுதி கொண்ட சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம், 'பி - கிரேடு' ஆக தகுதி குறைப்பு செய்யப்படும் என்ற அச்சம் நிலவுகிறது' என்-றனர்.

