ADDED : ஆக 01, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கரியகோவில் அடுத்த கலக்கம்பாடியை சேர்ந்தவர் முருகேசன் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை, கடந்த மாதம், 16ல் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதேபோல் குன்னுாரை சேர்ந்த பெருமாள், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக் திருடுபோனது.
கரியகோவில் போலீசார், 'சிசிடிவி' காட்சியின் அடிப்படையில் விசாரித்ததில், வெள்ளிமலை அருகே புளியந்துறையை சேர்ந்த ராஜ்குமார், 21, அவரது நண்பர் ராஜா, 23, பைக்குகளை திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், கரியகோவிலில் திருடிய, 2 பைக், வாழப்பாடியில் திருடிய இரு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்குகளை மீட்டனர்.