/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
/
அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 18, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், அனுமதியின்றி மண் அள்ளிய, 2 டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓமலுார் நாரணம்பாளையம் அருகே எட்டிக்குட்டப்பட்டியில், செல்லமுத்துக்கவுண்டர் பட்டா நிலத்தில், அனுமதியின்றி மண் அள்ளி செல்வதாக, ஓமலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, மண் அள்ளிய இரண்டு டிப்பர் லாரிகளையும், ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் போலீசார் கைப்பற்றினர். டிப்பர் லாரியில் இருந்த இரு டிரைவர்கள் தப்பினர். பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளரான எட்டிக்குட்டபட்டியை சேர்ந்த ராஜவேல், 48. என்பவரை போலீசார் கைது செய்தனர்.