ADDED : டிச 21, 2024 01:27 AM
அ நிறம் | அளவு
ஆத்துார், டிச. 21-
ஆத்துார் நகராட்சி சுகாதார அலுவலர் பழனிசாமி தலைமையில் பணியாளர்கள், ஆத்துார் புறவழிச்சாலை, சந்தனகிரி பிரிவு சாலையில் உள்ள குடோனில், கடந்த, 18ல் ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் இருந்ததால், 'சீல்' வைத்து, 'நோட்டீஸ்' வழங்கினர்.
நேற்று, குடோன் நடத்தி வந்த மணிகண்டனை வரவழைத்து, குடோனில் இருந்த, 2 டன்னுக்கு மேற்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நகராட்சி அலுவலர்கள் வசூலித்தனர். மேலும் இரு நாட்களில் குடோனில் உள்ள மற்ற பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.
